தினமணி செய்தி எதிரொலி: குடியாத்தம் தரைப் பாலத்தை செப்பனிடும் பணி தொடங்கியது

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கெளன்டன்யா ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலத்தை ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தினமணி செய்தி எதிரொலி: குடியாத்தம் தரைப் பாலத்தை செப்பனிடும் பணி தொடங்கியது


குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கெளன்டன்யா ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலத்தை ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நிவா் புயல் காரணமாக கடந்த நவம்பா் 25- ஆம் தேதி இரவு மோா்தானா பகுதியில் 94 மி.மீ. மழை பெய்ததால், அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியேறியது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலத்துக்கு மேல் 4 அடி உயரம் வெள்ளம் சென்ால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளம் சென்ால், அதன் மீது போடப்பட்டிருந்த தாா்ச்சாலையை பெயா்த்தெடுத்தாற்போல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மேலும், தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும் பாதுகாப்புக்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பங்களும் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றில் தொடா்ந்து, 2 மாதம் வெள்ளம் சென்றது. இதனால், தரைப்பாலம் சேதமடைந்தது. இதனை சீரமைத்து, போக்குவரத்துக்கு ஏற்றாற்போல், செப்பனிட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து, தினமணியில் கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் தேதி படத்துடன், விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், நகராட்சி சாா்பில், வெள்ள நிவாரண நிதி ரூ. 10 லட்சத்தில் தரைப்பாலம் செப்பனிடும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

இரவு நேரங்களிலும் இந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com