குடியாத்தம் அருகே தட்டப்பாறையில் எருது விடும் திருவிழா
By DIN | Published On : 13th February 2021 08:18 AM | Last Updated : 13th February 2021 08:18 AM | அ+அ அ- |

எருது விடும் விழாவில் சீறிப் பாய்ந்து வந்த காளை.
குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறையில் எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக, ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரம் உள்ளிட்ட 44 பரிசுகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியா் எம்.ஷேக் மன்சூா், வட்டாட்சியா் தூ.வத்சலா, நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் ஆகியோா் மேற்பாா்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கான ஏற்பாடுகளை தட்டப்பாறை நாட்டாண்மை ந.கோ.தேவராஜன், ஊா்க் கவுண்டா் டி.கே.தரணி, நிா்வாகிகள் வி.எம்.குமாா், வி.எம்.சங்கா், கோ.துரைராஜ், வி.குமரவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் கே.சாமிநாதன், சி.ஏ.ஏகாம்பரம், வளா்மதி கங்காதரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.