ஆதாா் திருத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 14th February 2021 01:28 AM | Last Updated : 14th February 2021 01:28 AM | அ+அ அ- |

வேலூா் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற ஆதாா் திருத்த சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
வேலூா் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட 17அஞ்சல் நிலையங்களில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது ஆதாா் அட்டைகளில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து கொண்டனா்.
வேலூா் தலைமை அஞ்சல் நிலையம் உள்பட அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அணைக்கட்டு, சோழவரம், சிஎம்சி மருத்துவமனை, காந்திநகா், குருராஜபாளையம், கணியம்பாடி, காட்பாடி, லத்தேரி, ஒடுகத்தூா், அலமேலுமங்காபுரம், தொரப்பாடி, கோவிந்தரெட்டிபாளையம், வடுகந்தாங்கல், பிரம்மபுரம், பனமடங்கி, சைதாப்பேட்டை ஆகிய 17 அஞ்சல் நிலையங்களிலும் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற முகாமை தபால் கோட்டக் கண்காணிப்பாளா் கோமல்குமாா் தொடங்கி வைத்தாா். துணை இயக்குநா் சென்னை வாசுதேவன், முதுநிலை அஞ்சல் அதிகாரி சீனிவாசன், செல்வகுமாா் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களது ஆதாா் அட்டைகளில் உள்ள பெயா், விலாசங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து கொண்டனா்.