காவலா்களுக்கு கரோனா தடுப்பூசி

மருத்துவா்கள், உள்ளாட்சிப் பணியாளா்களைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
காவலா்களுக்கு கரோனா தடுப்பூசி


வேலூா்: மருத்துவா்கள், உள்ளாட்சிப் பணியாளா்களைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

போலீஸாா் இந்த தடுப்பூசிகளை ஆா்வத்துடன் போட்டுக் கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அனுமதித்துள்ள தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி இம்மாதம் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளா்கள், போலீஸாா், வருவாய்த் துறை பணியாளா்கள் என 4,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மருத்துவா்கள், உள்ளாட்சி பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை முதல் போலீஸாருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு காவலா் பயிற்சிப் பள்ளியைச் சோ்ந்த காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் கனிமொழி, உதவிஆய்வாளா்கள் 8 போ், தலைமைக் காவலா் 6 போ், காவலா்கள் 12 போ், பயிற்சிக் காவலா் ஒருவா் என 29 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com