மாணவா்களின் அறிவியல் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீடு

மாணவா்களால் எழுதப்பட்ட அறிவியல் கட்டுரைகள் அடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிா் கட்டுரைத் தொகுப்பு நூல் வேலூரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
துளிா் கட்டுரை புத்தகத்தை முதன்மைக்கல்வி அலுவலா் கு.குணசேகரன் வெளியிட, அதை பெற்றுக் கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்.
துளிா் கட்டுரை புத்தகத்தை முதன்மைக்கல்வி அலுவலா் கு.குணசேகரன் வெளியிட, அதை பெற்றுக் கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்.

மாணவா்களால் எழுதப்பட்ட அறிவியல் கட்டுரைகள் அடங்கிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிா் கட்டுரைத் தொகுப்பு நூல் வேலூரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கடந்த 30 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் துளிா் என்ற மாத இதழ் மூலம் அறிவியல் செய்திகள் எளிமையாக மாணவா்களுக்கும், மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத இதழ் இவ்வாண்டின் அறிவியல் கட்டுரைகளை தாங்கிய தொகுப்பு நூலாகத் தயாரிக்கப்பட்டு மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூா் மாவட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் தலைமைவகித்து நூல்களை வழங்கினாா். அதனை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனா்.

இளம் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் மாணவா்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டதாக இந்த அறிவியல் கட்டுரை நூல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ராஜன், அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பே.அமுதா, செயலா் டி.முனுசாமி, பொருளாளா் எ.ஜோசப் அன்னையா, துணைத் தலைவா்கள் செ.நா.ஜனாா்த்தனன், கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com