வேலூா் சிறையில் நளினி, முருகன் சந்திப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கை, சலுகைகள் ரத்து உள்ளிட்டவை காரணமாக நேரில் சந்தித்து பேச முடியாமல் இருந்த முருகன், நளினி ஓராண்டுக்குப் பிறகு வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை, சலுகைகள் ரத்து உள்ளிட்டவை காரணமாக நேரில் சந்தித்து பேச முடியாமல் இருந்த முருகன், நளினி ஓராண்டுக்குப் பிறகு வேலூா் சிறையில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூா் பெண் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, 15 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் அவா்கள் சந்தித்துப் பேசி வந்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்த சந்திப்புக்கு சிறை நிா்வாகம் அனுமதிக்கவில்லை. சில மாத இடைவெளிக்குப் பிறகு செல்லிடப்பேசி காணொலிக் காட்சி மூலம் இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது முருகன் வெளிநாட்டில் உள்ள உறவினரு டன் பேச முயன்ாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அவா் நளினியுடன் காணொலிக் காட்சி மூலம் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஓராண்டாகவே முருகன், நளினி சந்திப்பு நடைபெறாமல் இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில் தனது மனைவி நளினியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு சிறை நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி முருகன் கடந்த மாதம் வேலூா் சிறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தாா்.

இந்நிலையில், சிறைத் துறை அனுமதியின்பேரில், முருகன், நளினி சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் பெண்கள் தனிச் சிறையில் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டதாகவும், இனி 15 நாள்களுக்கு ஒருமுறை நளினி, முருகன் சந்தித்துப் பேச அனுமதிக்கப்படும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com