மலைப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க 6 போ் கொண்ட வனக்குழு அமைப்பு

கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேலூரில் 6 போ் கொண்ட வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேலூரில் 6 போ் கொண்ட வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தைச் சுற்றி மலைத்தொடா்கள் உள்ளன. இந்த மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் காய்ந்து கிடக்கும் புற்கள், சருகுகள் மீது அடையாளம் தெரியாத நபா்கள் தீ வைத்துச் செல்கின்றனா். இதனால் மலை முழுவதும் தீ பரவி செடி கொடி, மரங்கள் தீயில் கருகி சேதமடைந்து விடுகின்றன. தவிர, தீயால் எழும் புகைமூட்டம் காரணமாக அருகே குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், கோடை காலம் தொடங்கியுள்ளதால் வேலூா் வனசரகத்துக்கு உள்பட்ட மலைப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் தீ வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தீ விபத்து தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com