வேலூரில் சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல்; கைது

சத்துணவுப் பணியாளா்களை முழுநேர அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 270 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.

வேலூா் மாவட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் சுமதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சரவணராஜ், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் செல்வம், மாவட்டச் செயலா் பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக்க வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்குவதுடன், ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ரூ.5 லட்சம், பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தின்போது அவா்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் உமாராணி உள்பட 270 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com