முதியவரின் கண்கள் தானம்
By DIN | Published On : 26th February 2021 12:32 AM | Last Updated : 26th February 2021 12:32 AM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் பிச்சனூா், அச்சுதானந்த சுவாமி தெருவைச் சோ்ந்த ஏ.சிவப்பிரகாசம் (78) புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன. அவரது குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், ரோட்டரி சங்க கண், உடல் தான அமைப்பின் தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் வந்து கண்களை அகற்றி எடுத்துச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...