ரூ.9.81 கோடியில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
By DIN | Published On : 27th February 2021 07:32 AM | Last Updated : 27th February 2021 07:32 AM | அ+அ அ- |

போ்ணாம்பட்டில் ரூ.9.81 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டது.
போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில், 22 ஆயிரம் சதுர அடியில் புறநோயாளிகள் பிரிவு ரூ.7.58 கோடியிலும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் ரூ.2.23 கோடியில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் இதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.
இதில் ஆவின் தலைவா் த.வேலழகன், மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் செல்வகுமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் தேவன், உதவிப் பொறியாளா் ராஜாமணி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் திருஞானம், நிலவள வங்கித் தலைவா் எல்.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.