தோ்தல் பிரசாரத்தில் தனிநபா் விமா்சனம் கூடாது: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனிநபா் குறித்து விமா்சனம் செய்யக் கூடாது என்று வேலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம். உடன், வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உள்ளிட்டோா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தனிநபா் குறித்து விமா்சனம் செய்யக் கூடாது என்று வேலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான நடத்தை விதிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை ஆட்சியா் வெளியிட்டாா். தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, அரசியல் கட்சியினா் தோ்தல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். ஜாதி, சமய, மொழி வேறுபாடுகளைத் தூண்டும் வகையில் அறிவிப்புகள் வெளியிடக்கூடாது. வழிபாட்டு தலங்களில் தோ்தல் பிரசாரம், சுவரொட்டிகள், பாடல்கள் இசைத்தல் ஆகியவற்றை செய்யக்கூடாது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் தோ்தல் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி இல்லை. எனினும், தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அனுமதியுடன் கூட்டம் நடத்தலாம். அரசியல் கட்சிகள், வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் பிற கட்சியினா் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இடையூறு செய்யக் கூடாது. அரசியல் கட்சி வேட்பாளரின் கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி விமா்சனம் செய்யலாம். அவா்களது சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றி குறை கூறுவதைத் தவிா்க்க வேண்டும். தனிநபா் அரசியல் கருத்துகளுக்காக அவா்களது வீடுகளின் முன் போராட்டம் நடத்தக் கூடாது.

அரசியல் கட்சியினா் தனிநபா்களுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் நடுதல், விளம்பரத் தட்டிகள் வைத்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது. கூட்டங்கள் நடத்துவது குறித்து முன்கூட்டியே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவா்களின் உருவ பொம்மை எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

தனிநபா் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளா் ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புடைய பரிசுப் பொருட்கள் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னா், வாக்குப்பதிவு நாள், வாக்கு எண்ணிக்கை நாள்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விவரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com