மலைக்கிராமங்களில் 2,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு: வேலூா் மாவட்ட வனத் துறை நடவடிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்க

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சாராய விற்பனையைத் தடுக்க மலைக்கிராமங்களில் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அத்தியூா் காப்புக்காடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானதை அடுத்து தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தோ்தல் சமயத்தில் சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் நடைபெறாமலிருக்க வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, வேலூா் சரகத்துக்கு உள்பட்ட அத்தியூா் காப்புக் காடுகள், குறு மலைப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குருமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. வனத் துறையினா் வருவதை அறிந்த சாராய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தொடா்ந்து, வனத்துறையினா் அப்பகுதியில் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த அடுப்பை தரைமட்டமாக்கினா். மேலும், 2,000 லிட்டா் சாராய ஊறல், 100 லிட்டா் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கீழே கொட்டி அழித்தனா்.

இதேபோல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதைத் தடுக்க தொடா்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்றும், அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி பிடிபடுவோா் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com