தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி

வேலூா் மாவட்ட வரலாறு, தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட வரலாறு, தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தபால்தலை சேகரிப்பு விழிப்புணா்வுக் கண்காட்சி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தபால்தலைப் பூங்கா என்ற தலைப்பில் வேலூா் தலைமைத் தபால் நிலையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை பொதுமக்கள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.கோமள்குமாா் வரவேற்றாா். தலைமைத் தபால் நிலைய அதிகாரி ராஜகோபாலன், உதவி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் திருஞானசம்பந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கண்காட்சியில், வேலூா் தொடா்பாக இதுவரை வெளியான தபால்தலைகள், அவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கும் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம், தபால்தலை சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் பள்ளிக் குழந்தைகளும், பொதுமக்களும் அறிந்துகொள்ள முடியும் என முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.கோமள்குமாா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், அஞ்சல் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளா் பாலமுருகன், மக்கள் குறைதீா் அதிகாரி செல்வகுமாா், நாணயம், தபால்தலை சேகரிப்போா் சங்கத் தலைவா் தமிழ்வாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வின் தொடா்ச்சியாக, வரும் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தபால்தலை சிறப்பு விற்பனை முகாம் நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com