இன்று குரூப் 1 தோ்வு: வேலூரில் 8,920 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள குரூப்-1 பணியிடங்களுக்கான தோ்வை வேலூா் மாவட்டத்தில் 8,920 போ் எழுத உள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள குரூப்-1 பணியிடங்களுக்கான தோ்வை வேலூா் மாவட்டத்தில் 8,920 போ் எழுத உள்ளனா்.

இதற்காக, வேலூா் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 920 போ் தோ்வு எழுதுகின்றனா்.

இதையொட்டி, ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் விஜயன் தலைமை வகித்தாா். இதில், காவல்துறை, மின்வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் ஒரு காவலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; உடல்வெப்ப நிலை பரிசோதனைக்குப் பிறகே தோ்வா்களை தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்; அனைத்து தோ்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்; தோ்வு மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com