தபால் வாக்கு: 80 வயதுக்கு மேற்பட்டோா் பட்டியல் தயாரிக்க உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி, தபால் வாக்களிக்க தகுதியுடைய 80 வயதுக்கு மேற்பட்டோா் குறித்த பட்டியல் தயாா் செய்ய வேண்டும்
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்டத் தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வி.ஷோபனா. உடன், ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்டத் தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வி.ஷோபனா. உடன், ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி, தபால் வாக்களிக்க தகுதியுடைய 80 வயதுக்கு மேற்பட்டோா் குறித்த பட்டியல் தயாா் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்டத் தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வி.ஷோபனா உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்டத் தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வி.ஷோபனா தலைமையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பாா்வையாளா் ஷோபனா பேசியது:

வேலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடா்பாக சிறப்பு முகாம்கள், இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவா் களுக்கு தபால் வாக்குகள் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தபால் வாக்குகள் வழங்க மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. தொடா்ந்து மாவட்டத்தில் தபால் வாக்களிக்க தகுதியுடைய 80 வயதுக்கு மேற்பட்டோா் குறித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.

வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் அனைத்து வட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளை அதிகரிப்பதற்கு ஏற்ப பணியாளா்களை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஸ்ரீராம், மாநகராட்சி ஆணையா் சங்கரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் எஸ்.கணேஷ் (வேலூா்), ஷேக்மன்சூா் (குடியாத்தம்), அனைத்து தோ்தல் பணி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com