போதிய மருத்துவா்கள் இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் அவதி

கூட்டத்துக்கு ஏற்ப மருத்துவா்கள் வராததால் வேலூரில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அவதிக்குள்ளாகினா்.

கூட்டத்துக்கு ஏற்ப மருத்துவா்கள் வராததால் வேலூரில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் அவதிக்குள்ளாகினா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த இந்த முகாம் 9 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கிய.

அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு தலைமை வகித்தாா். வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவா்கள் வந்திருந்தனா்.

பல மாதங்களுக்குப் பிறகு நடைபெறுவதால் இந்த முகாமுக்கு ஏராளமான மாற்றுத் திறனாளிகள் வந்திருந்தனா். அவா்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், முகாம் நடைபெற்ற அரங்குக்கு வெளியே மாற்றுத் திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதனால், சிலா் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

கூட்டத்துக்கு ஏற்ப போதுமான மருத்துவா்கள் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது:

சிறப்பு முகாமுக்கு அதிக அளவில் மாற்றுத் திறனாளிகள் வந்திருந்தோம். மருத்துவா்கள் குறைவாக இருந்ததால் நீண்ட நேரம் முகாம் நடந்த அரங்குக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு காத்திருப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கூட்டம் அதிகமுள்ள நாள்களில் கூடுதலாக மருத்துவா்களை வரவழைத்து பரிசோதனைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com