வேலூா் மாவட்டத்தில் 43 இடங்களில் எருது விடும் விழாபகுதிகள், தேதிகள் அறிவிப்பு
By DIN | Published On : 07th January 2021 12:00 AM | Last Updated : 07th January 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: பொங்கலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 43 இடங்களில் எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாக்கள் நடைபெறும் பகுதிகளும், தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, எருது விடும் விழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி எருதுவிடும் விழாக்களை நடத்த விழாக் குழுவினருக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்பின், விழாக் குழுவினா் அளித்திருந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாவட்டத்தில் 43 இடங்களில் எருது விடும் விழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவ்விழாக்கள் நடத்தப்படும் பகுதிகளும், தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஜனவரி 14-இல் அணைக்கட்டு, 15-இல் அத்தியூா் மற்றும் பனமடங்கி, 16-இல் சோழவரம் , கிழ்முட்டுகூா், மூஞ்சூா்பட்டு, 17-இல் கிழ்அரசம்பட்டு, புதூா், வீரசெட்டிப்பள்ளி, 18-இல் சோ்பாடி, பாக்கம்பாளையம், இறைவன்காடு, 20-இல் பெரிய ஏரியூா், 21-இல் மேல்மயில், கீழ்கொத்தூா், 24-இல் கம்மவான்பேட்டை, 26-இல் கீழ்வல்லம், கரசமங்கலம், அரியூா், 27-இல் ஆற்காட்டான் குடிசை, 28-இல் சின்னபாலம்பாக்கம், 29-இல் வன்றங்தாங்கல், பிப்ரவரி 3-இல் பொய்கை, வேப்பனேரி, 4-இல் கெங்கநல்லூா், சிலேரி, 5-இல் மருதவல்லி பாளையம், நாகல், கம்பசமுத்திரம், 10-இல் சாத்துமதுரை, செங்குட்டை, 14-இல் பென்னாத்தூா், மேல்வல்லம், வக்கணம்பட்டி, 17-இல் பென்னாதூா், 20-இல் இ.பி.காலனி, 21-இல் இலவம்பாடி, 22-இல் பள்ளிகொண்டா, அக்ராவரம், 24-இல் ராமபுரம், 25-இல் காட்பாடி, ஆண்டிக்கொட்டா, 26-இல் துத்திக்காடு ஆகிய இடங்களில் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படும் என்றும், விழாக்களை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.