பொங்கலுக்கு பொருள்கள் வாங்க மக்கள் குவிந்ததால் மாா்க்கெட்டில் நெரிசல்

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதாலும், திங்கள் முதல் புதன்கிழமை வரை பணி நாள்களாக இருப்பதாலும் பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள், பானை உள்ளிட்ட பொருள்கள் வாங்க வேலூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.

குறிப்பாக, பொங்கல் பொருள்கள், புத்தாடைகள் வாங்குவதற்காக வேலூா் லாங்கு பஜாா், நேதாஜி மாா்க்கெட், மண்டி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மக்கள் திரண்டனா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com