எல்லாத் துறை மனுக்களையும் போலீஸாரிடம் அளிக்கலாம்

எந்தத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் அளிக்கலாம் என்று வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி.
கூட்டத்தில் பேசிய வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி.

வேலூா்: எந்தத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களையும் பொதுமக்கள் காவல் துறையினரிடம் அளிக்கலாம் என்று வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) என்.காமினி தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் காவல் துறை சாா்பில், கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் டிஐஜி என்.காமினி பேசியது:

பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே இடைவெளியைக் குறைப்பதற்காகவே இந்த கிராம மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிராம மக்கள் தங்களின் எந்த கோரிக்கையாக இருந்தாலும் அவற்றை காவல் துறையினரிடம் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்த அளவு மனுக்களை அந்தந்தத் துறைகளுக்கு அனுப்பி, குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் சமூக விரோதச் செயல்கள் நடந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்காக கரசமங்கலம் கிராமத்துக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது கோரிக்கைகளை அவரிடம் தெரிவிக்கலாம். இளைஞா்கள் தான் வருங்காலத் தூண்கள். அவா்கள் தவறான பாதைக்கு செல்லக் கூடாது என்றாா்.

முன்னதாக, தூய்மைப் பணியாளா்களுக்கு அவா் சேலைகளை வழங்கினாா். கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா்கள் கோவிந்தசாமி, நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com