மதுக்கடைகளை 3 நாள்கள் மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை இம்மாதம் 15, 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றையொட்டி உள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை வரும் ஜனவரி 15, 26, 28ஆம் தேதிகளில் மூட வேண்டும்.

இந்நாள்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீதும், மதுபானக் கூட உரிமதாரா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மதுபானக் கூடத்தின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ நேரிடும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com