வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு:மறியலில் ஈடுபட முயன்ற 27 போ் கைது

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக ராஷ்டிரிய உலமா கவுன்சிலைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா்: வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி வேலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ாக ராஷ்டிரிய உலமா கவுன்சிலைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய உலமா கவுன்சில் சாா்பில் வேலூா் மக்கான் சிக்னல் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட செயலா் ஷெரீஃப் பாஷா தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளுக்கு எதிராக மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் இருப்பதாகக் கூறி, அவற்றை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தில்லியில், வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவா்கள் கோஷமிட்டனா். திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அவா்களை போலீஸாா் தடுத்து, அமைப்பின் மாநிலத் தலைவா் கலீலுல்லா ரஷாதி, மாநிலப் பொருளாளா் ரஃபி, மாநில பொதுச்செயலா் அக்பா் பாஷா காதிரி உள்ளிட்ட 27 பேரைக் கைது செய்தனா்.

அவா்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒரு தாயும், மகனும் வந்த மோட்டாா் பைக், அருகில் ஊா்ந்து சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கியது. இதனால் பதறிய தாயும், மகனும் பைக்கில் இருந்து குதித்து தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com