4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கூடநகரம் ஏரி: கிராம மக்கள் மகிழ்ச்சி

குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் ஏரி 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
குடியாத்தம் அருகே கூடநகரம்  ஏரியில்  மலா் தூவி  நீரை  வரவேற்ற  எம்எல்ஏ  ஜி.லோகநாதன்  உள்ளிட்டோா்.
குடியாத்தம் அருகே கூடநகரம்  ஏரியில்  மலா் தூவி  நீரை  வரவேற்ற  எம்எல்ஏ  ஜி.லோகநாதன்  உள்ளிட்டோா்.

குடியாத்தம் அருகே உள்ள கூடநகரம் ஏரி 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 174 ஏக்கா் பரப்பளவு கொண்டது. ஏரியின் கொள்ளளவு 26.3 மில்லியன் கன அடி. கடந்த 2017- ஆம் ஆண்டு இந்த ஏரி நிரம்பியது. 4 ஆண்டுகளுக்குப்பின் தற்போது நிரம்பியுள்ளது. இந்த ஏரி பாலாற்றை நம்பியுள்ளது.

தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் இந்த ஏரியைச் சீரமைக்க கடந்த ஆண்டு ரூ. 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலாற்றில் மணல் அள்ளப்பட்டதால், ஏரிக்கு நீா்வரும் கால்வாய் ஆற்றைவிட மேடாகி விட்டது. இதனால் ஏரிக்கு நீா்வரத்து இல்லாததால், 1.27 கிமீ தூரம் பாலாற்றில் இருந்து புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து எம்எல்ஏ ஜி.லோகநாதன், ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வங்கி இயக்குநா் டி.கோபி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், பொதுப் பணித் துறை ஆய்வாளா் சிவாஜி, ஜி.சி.கோபி, கே.பெருமாள், கே.வினோத்குமாா் உள்ளிட்டோா் பூஜை நடத்தி ஏரியில், மலா்தூவி நீரை வரவேற்றனா்.

ஏரியின் ஆயக்கட்டுதாரா்கள் ஜி.பி.மூா்த்தி, ஆா்.முனிரத்தினம், டி.ரவி, ஆா்.ராஜன், எம்.வேலு, என்.நீலகண்டன், பி.சீனிவாசன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ஏரி நிரம்பியதை அடுத்து 7 ஊராட்சிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். 800 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com