ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டது போல், பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு வேலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு வேலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா்.

வேலூா்: கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டது போல், பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் மேல்மொணவூரில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் கே.ராஜா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் எஸ்.பரசுராமன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், தொழிலாளா் நலவாரியம் சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் ஏற்கெனவே ஆட்டோ தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் தொழிலாளா்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது எனக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் என்.காசிநாதன், மாவட்டச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோரிக்கை தொடா்பான மனு தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com