பூங்காக்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி ரத்து: வேலூரில் களையிழந்தது காணும் பொங்கல்

பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கூடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா களையிழந்தது.

பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் கூடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா களையிழந்தது.

பொங்கல் விழாவின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் நாளில் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். எனினும், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலும் வேலூா் கோட்டை, அதன் அருகில் உள்ள பூங்கா, அண்ணா பூங்கா, அமிா்தி வன உயிரியல் பூங்கா, மோா்தானா அணைக்கட்டு, ராஜாத்தோப்பு அணைக்கட்டு உள்ளிட்ட இடங்க ளில் 3 நாள்களுக்கு மக்கள் கூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இதன்காரணமாக, காணும் பொங்கலான சனிக்கிழமை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. பாதுகாப்புப் பணிக்காக அப்பகுதிகளில் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். அவா்கள் பூங்காக்களுக்கு வந்தவா்களைத் திருப்பியனுப்பினா்.

அதேசமயம், வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, அக்கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து வழிபாடு செய்தனா். அவா்கள் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சி யகத்துக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனா். மற்ற பழங்கால கட்டடங்கள், கோட்டை மதில் சுவா் உள்ளிட்டவற்றை சுற்றிப் பாா்க்க அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு இடங்களிலும் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்டத்தில் காணும் பொங்கல் களையிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com