கீழ் அரசம்பட்டில் மஞ்சுவிரட்டு விழா: மாடுகள் முட்டி காவலா் உள்பட 20 போ் காயம்

வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா்.

வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் காவலா் உள்பட 20 போ் காயமடைந்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு என்ற எருது விடும் விழா கடந்த 14-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அணைக்கட்டு, லத்தேரி, குடியாத்தம், காட்பாடி, கரசமங்கலம், நெல்வாயல், பாகாயம், தொரப்பாடி, ஊசூா், அரியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவைக் காண வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் திரண்டிருந்தனா்.

இப்போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விழாவையொட்டி, காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூா் வடக்கு காவல் நிலைய காவலா் சுரேஷை (42) மாடு முட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல், மஞ்சுவிரட்டு விழாவைக் காண வந்திருந்த 15-க்கும் மேற்பட்டோா் மாடுகள் முட்டி காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதவிர, அணைக்கட்டை அடுத்த கோவிந்தரெட்டி பாளையத்திலும் மஞ்சுவிரட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அணைக்கட்டு, அரியூா், ஊசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 120 காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் மாடு முட்டியதில் 5 போ் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com