மேல்மாயிலில் எருது விடும் விழா

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலாா் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது.
மேல்மாயிலில் எருது விடும் விழா


குடியாத்தம்: கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலாா் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை எருது விடும் விழா நடைபெற்றது.

இதில் வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் சித்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 134 காளைகள் பங்கேற்றன. முதலிடம் பிடித்த லத்தேரி காளைக்கு முதல் பரிசாக ரூ. 1.10 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற காளைகளுக்கு 2-ஆம் பரிசாக ரூ. 85 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ. 50 ஆயிரம் உள்ளிட்ட 45 பரிசுகள் வழங்கப்பட்டன.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், வட்டாட்சியா் ராஜேஸ்வரி, காவல் ஆய்வாளா் முரளிதரன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com