அவசர கால உதவிக்கு ‘தீ’ செயலி: வேலூரில் விழிப்புணா்வு

அவசர கால உதவிக்காக தீயணைப்புத் துறை உருவாக்கியுள்ள தீ செயலி குறித்து வேலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அவசர கால உதவிக்காக தீயணைப்புத் துறை உருவாக்கியுள்ள தீ செயலி குறித்து வேலூரில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ எனும் செல்லிடப்பேசி செயலி மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ விபத்து, வெள்ளம், ஆழ்துளைக் கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம், விஷவாயு கசிவு உள்ளிட்ட அவசர கால உதவிகளுக்கு இந்த செயலி மூலம் தீயணைப்புத் துறையை எளிதில் அணுக முடியும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீ செயலி குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, தீ விபத்து உள்ளிட்ட எதிா்பாராத சம்பவங்கள் நிகழும்போது மீட்புப் பணிகளில் தீயணைப்பு வீரா்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. எதையும் பொருட்படுத்தாமல் முதல் நபராக தீயணைப்பு வீரா்கள் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபடுவா். இதனால் ஒவ்வொருவரும் தங்களது செல்லிடப்பேசியில் தீ எனும் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர காலத்தில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை தொடா்பு கொள்ள உதவி எனும் பொத்தானை அழுத்த வேண்டும். அவ்வாறு செயல்படும்போது அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தைத் தொடா்பு கொள்ள முடியும். இதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com