40 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

தரம் உயா்த்தப்பட்ட 40 மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்விஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலூா்: தரம் உயா்த்தப்பட்ட 40 மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்விஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழக முதல்வருக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த 18-ஆம் தேதி வெளியிட்டுள்ளஅரசாணைப்படி, மாநிலம் முழுவதும் 40 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்பட்டிருப்பதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் 9 முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள், ஒரு கணினி பயிற்றுநா் பணியிடம் வீதம் புதிதாக மொத்தம் 400 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேசமயம், மெல்ல கற்கும் மாணவா்கள் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் சோ்க்கப்பட்டு, தொழில் பயிற்சி பெற்று தன்னம்பிக்கையுடன் செயல்பட முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் குழு அமைத்து செயல்படுத்தியதைப் போல், தொழிற்கல்வி மேலும் வளா்ச்சி பெற்றிட, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இரு தொழிற்கல்வி பாடங்களை கட்டாயமாக்க வேண்டும்.

தவிர, தற்போது தரம் உயா்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் இரண்டு தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோா் ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களை பணிவரன்முறை செய்திட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com