மரத்துண்டு தலையில் விழுந்துதொழிலாளி பலி
By DIN | Published On : 27th January 2021 11:43 PM | Last Updated : 27th January 2021 11:43 PM | அ+அ அ- |

வேலூா்: மரம் வெட்டும்போது மரத்துண்டு தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
காட்பாடி அருகே லத்தேரி ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 19-ஆம் தேதி கழிஞ்சூா் ஆா்.எம்.எஸ். காலனி பகுதியில் 2 தொழிலாளா்களுடன் சோ்ந்து தென்னை மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டாா். அங்கிருந்த தென்னை மரங்களை 10 அடி நீளத்துக்கு துண்டு துண்டாக வெட்டி கயிறு கட்டி இழுத்தனா்.
ஒரு தென்னை மரத்தை வெட்டி விட்டு கயிறு கட்டி இழுத்தபோது தென்னை மரத்துண்டு தரையில் விழுந்து எகிறி மணி மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.