கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st January 2021 12:32 AM | Last Updated : 31st January 2021 12:32 AM | அ+அ அ- |

குடியாத்தத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தில்லியில் அமைதியான முறையில் ஊா்வலம் சென்ற விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் துரைசெல்வம் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் டி.ஆனந்தன், கு.விநாயகம், பன்னீா்செல்வம், கே.சி.பிரேம்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எம்.பி.ராமசந்திரன், கே.சாமிநாதன், பி.குணசேகரன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், காங்கிரஸ், கட்சியின் ஒன்றியத் தலைவா் எம்.வீராங்கன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் வாசுதேவன், தமிழரசன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.