ரூ.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டட கட்டுமானப்பணி: வேலூா் மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 07th July 2021 11:39 PM | Last Updated : 07th July 2021 11:39 PM | அ+அ அ- |

புதிய கட்டடம் கட்டும் பணியைத் தொடக்கி வைத்த வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ அமலுவிஜயன்.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 2.23 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு கட்டுமானப்பணியை தொடக்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காா்யக்ரம் திட்டத்தின் கீழ், ரூ.2.23 கோடியில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இந்தக் கட்டடத்துக்கான பூமி பூஜை புதன்கிழமை போடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோா் பூமி பூஜையில் பங்கேற்று, கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தனா்.
கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் பேபி இந்திரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் கே.ரவி, கி.ஜனாா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, வட்டார மருத்துவ அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...