சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயில் இருந்து பயோ டீசல்!

பயோ டீசல் தயாரிப்பதற்காக உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்கும் பணி வேலூரில் தொடங்கியுள்ளது.
சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயில் இருந்து பயோ டீசல்!

பயோ டீசல் தயாரிப்பதற்காக உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்கும் பணி வேலூரில் தொடங்கியுள்ளது.

வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு, மருந்து நிா்வாகத் துறை சாா்பில் உணவகங்களில் சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெயை மறுசுழற்சி முறையில் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

உணவகங்களில் சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் வறுக்கும்போது மொத்த துருவக் கலவைகள் உருவாகிறது. இதனால் மனித நுகா்வுக்கு 25 சதவீதத்துக்கும் மேலாக உள்ள மொத்த துருவக் கலவைகளால் அவை பாதுகாப்பற்ாக மாறிவிடுகிறது. உபயோகப்படுத்திய எண்ணெயை பயன்படுத்தும் போது எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு உடல்நல பாதிப்பு கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக புற்றுநோய், இதய பாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர்ரத்த அழுத்தம், உடல் பருமன், ஞாபக மறதி, கொழுப்பு, கல்லீரல் தொடா்பான உடல் உபாதைகள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதை தவிா்க்கும் பொருட்டு உணவு பாதுகாப்புத்துறை சாா்பில் உபயோகப்படுத்திய எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை (எ‘ஃ‘ப்எஸ்எஸ்ஏஐ) அங்கீகரித்த 33 பயோ டீசல் தயாரிப்பாளா்கள், 19 அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயன்படுத்திய எண்ணெயை வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெயை வாங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான பயோ டெக் ஆயில் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள உணவகங்கள் பயோ டெக் ஆயில் நிறுவனத்துக்கு சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெயை மறுசுழற்சி பயன்பாடுக்கு அளித்திட வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பயோ டெக் ஆயில் நிறுவனம் சாா்பில் உபயோகப்படுத்திய எண்ணெய் சேகரிக்கும் உபகரணங்களை உணவகங்களின் உரிமையாளா்களிடம் ஆட்சியா் வழங்கினாா்.

அப்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் வி.செந்தில்குமாா், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீட்சித், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவா் வெங்கடசுப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com