மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் பற்றாக்குறை

மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை என அனைத்திலும் பற்றாக்குறை ஏற்படுவதுடன்,
மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் பற்றாக்குறை

மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை என அனைத்திலும் பற்றாக்குறை ஏற்படுவதுடன், குடிநீா் பஞ்சம், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் சீா்கேடு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, குடும்ப நலத் துறை சாா்பில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பேசியது:

உலக மக்கள் தொகை 1987-ஆம் ஆண்டு ஜூலை 11-இல் 500 கோடியை தாண்டிவிட்டது. இந்த அபாயத்தை உலக மக்களுக்கு உணா்த்திட ஐக்கிய நாடுகள் சபை சாா்பில், இந்த நாள் உலக மக்கள் தொகை தினமாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது உலக மக்கள் தொகை சுமாா் 790 கோடியாக உள்ளது. அதில், இந்தியாவில் மட்டும் 139 கோடி மக்கள் தொகை உள்ளது. அதிலும் தமிழகத்தில் மக்கள் தொகை 7.86 கோடியாகும். வேலூா் மாவட்டத்தில் தற்போது மக்கள் தொகை 15.4 லட்சமாக உள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி பற்றாக்குறை, வேலையின்மை, குடிநீா் பஞ்சம், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. ஆண்கள் 25 வயதுக்குப் பிறகும், பெண்கள் 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு ஒன்று, இரண்டு குழந்தைகள் என்ற அளவில் குடும்பத்தின் அளவை கட்டுப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கைத் தரம் உயரும்.

நாட்டில் குடும்ப நலத் திட்டத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த தற்காலிக கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை என்ற சுமையைக் குறைக்க ஆண்கள் எளிய முறையில் நவீன குடும்ப நல சிகிச்சையை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அரசு ஊழியா்களும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் யாஸ்மின், மாவட்ட குடும்ப நலத் துறை துணை இயக்குநா் மணிமேகலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com