குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ரூ.103.35-க்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்

 வேலூா் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.103.35க்கு அரைவைக் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

 வேலூா் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.103.35க்கு அரைவைக் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயைப் பெருக்கவும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை மூலம் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் (பிஎஸ்எஸ்) கடந்த ஆண்டு பச்சைப்பயிறு, துவரை, உளுந்து, தேங்காய் கொப்பரை ஆகிய விளை பொருள்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன.

நிகழாண்டில் (2021-22) அரைவைக் கொப்பரை நியாயமான சராசரி தரம் கிலோ ரூ.103.35 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்ஏஎ‘ஃ’ப்இடி மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 1200 மெட்ரிக் டன் வீதம் 2,400 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பா் வரை செயல்படுத்தப்படும்.

அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ கொண்டு வரலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின்ஆதாா், வங்கிக்கணக்கு புத்தகம், நிலச்சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு வேலூா் வேளாண்மை துணை இயக்குநா் - 0416 - 2220713, வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் - 0416-2220083, 9789299174, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் 04171 - 2229573, 9751333818 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com