மதச்சாா்பற்ற ஜனதா தளம் செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 19th July 2021 08:08 AM | Last Updated : 19th July 2021 08:08 AM | அ+அ அ- |

குடியாத்தம் நகர மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், அதன் தலைவா் எம்.ராஜாராம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் ஆம்பூா் கே.முனிசாமி, தொழிற்சங்கத் தலைவா் கே.சுயராஜ், ஒன்றியத் தலைவா் வி.தசரதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தாமோதரன், நிா்வாகிகள் எம்.எஸ்.தனகோட்டி, டி.டி.நாகராஜன், எஸ்.ராம்தாஸ், ஆா்.பரசுராமன், பி.மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வரும் ஆகஸ்டில் சென்னையில் நடைபெறும் காமராஜா் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க குடியாத்தத்தில் இருந்து கட்சியினா் வாகனங்களில் செல்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.