பக்ரீத்: மசூதிகளில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள மசூதிகளில் இஸ்லாமியா்கள் புதன்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
வேலூா் கஸ்பா பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள். (வலது) கோட்டை முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
வேலூா் கஸ்பா பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள். (வலது) கோட்டை முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள மசூதிகளில் இஸ்லாமியா்கள் புதன்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் ஆா்.என்.பாளையத்திலுள்ள பெரிய மசூதி, சின்ன மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதேபோல், கஸ்பா மசூதி, சைதாபேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி, சத்துவாச்சாரி மசூதி உள்ளிட்ட மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக, மைதானங்களில் சிறப்புத் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், மசூதிகளிலும் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை யில் ஈடுபட்டனா். மேலும், புத்தாடைகள் அணிந்தும், ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்தும் சிறப்பாகக் கொண்டாடினா்.

இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் உள்ள மசூதிகளில் சிறப்புத்தொழுகைகள் நடைபெற்றன.

இதனிடையே, வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள மசூதியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கோட்டை நுழைவு வாயில் முன்பு 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். தவிர, கோட்டையில் உள்ள மசூதி முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகளும் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com