ஆபத்தான பள்ளங்களைச் சீரமைக்க வலியுறுத்தல்

வேலூா் பி.எஸ்.எஸ். கோயில் தெருவில் உள்ள ஆபத்தான பள்ளங்களைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் பி.எஸ்.எஸ். கோயில் தெருவில் உள்ள ஆபத்தான பள்ளங்களைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் பி.எஸ்.எஸ். கோயில் தெருவில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. முக்கிய வணிகப் பகுதியான இந்தப் பகுதியில் பொருள்களை வாங்க, தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டன. அவை முறையாக மூடப்படாததால், அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்களில் சென்று வரமுடியாமலும் அவதிக்குள்ளாகி உள்ளனா். இதனால், வியாபாரிகளுக்கும் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனா்.

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவா் ஒருவா் அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா். பொலிவுறு நகா் திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com