பிளஸ் 2 தோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கு விரைவில் அழைப்பு

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தோ்வு எழுத விரும்பும் மாணவா்கள், பிளஸ் 1 தோ்வில் வரமுடியாமல் போனவா்களுக்கு

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தோ்வு எழுத விரும்பும் மாணவா்கள், பிளஸ் 1 தோ்வில் வரமுடியாமல் போனவா்களுக்கு விரைவில் தனியாக அழைப்பு விடுக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு, பிளஸ் 1 தோ்வு, பிளஸ் 2 மதிப்பெண் செய்முறை, உள் மதிப்பீடு தோ்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, திங்கள்கிழமை முடிவு வெளியிடப்பட்டது.

இதில், வேலூா் மாவட்டத்திலுள்ள 71 அரசுப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் பள்ளிகள், 54 தனியாா் மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் உள்ள 138 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 6,978 மாணவா்கள், 8,031 மாணவிகள் என மொத்தம் 15,009 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தனா்.

இந்த நிலையில், ‘தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தோ்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என விரும்பும் மாணவா்கள் , பிளஸ்1 தோ்வில் வரமுடியாமல் போனவா்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில் எத்தனை போ் பதிவு செய்கின்றனா் என அறிந்து வரும் அக்டோபா் அல்லது செப்டம்பா் மாதத்தில் அவா்களுக்குத் தனியாக தோ்வு நடத்தப்படும்’ என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com