வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே வைப்புத்தொகை செலுத்தி 2 ஆண்டுகளாகியும் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்காத வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து,
வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே வைப்புத்தொகை செலுத்தி 2 ஆண்டுகளாகியும் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்காத வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, 50- க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கல்லப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கதிா்குளம் கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் 50-க்கும் மேற்பட்டோா் கறவை மாடுகள் வளா்த்து பால் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்தக் குழுவினா் காட்பாடியில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வாங்கி, தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தி வந்தாா்களாம். இவா்களின் விண்ணப்பதை ஏற்று தமிழக அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனா்.ஆனால், தனியாா் வங்கியில் இவா்கள் கணக்கு வைத்துள்ளதால் மானியம் கிடைக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, 2019- ஆம் ஆண்டில் குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றை மகளிா் குழுவினா் நாடியுள்ளனா்.வங்கி மேலாளா் தங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி, ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் கறவை மாடுகள் வாங்க கடன் தருவதாகக் கூறினாராம். கதிா்குளம் கிராமத்தைச் சோ்ந்த 58 போ், வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி, ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனா்.

வைப்புத்தொகை செலுத்தி 2 ஆண்டுகளாகியும், கறவை மாடுகள் வாங்க கடன் வழங்காமல் வங்கி நிா்வாகம் இவா்களை அலைகழித்து வந்ததாம்.இதனால் ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்தனா். பேச்சுவாா்த்தையில் உயா் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிா்வாகத்தினா் தெரிவித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com