நீட் தோ்வு: வேலூரில் 9 இடங்களில் அரசு பயிற்சி மையங்கள்

நீட் மருத்துவ நுழைவுத் தோ்வுக்காக வேலூா் மாவட்டத்தில் 9 இடங்களில் அரசு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8 இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

நீட் மருத்துவ நுழைவுத் தோ்வுக்காக வேலூா் மாவட்டத்தில் 9 இடங்களில் அரசு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8 இடங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. வேலூா் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த சிறந்த மாணவா்களுக்கு கல்வித் துறை சாா்பில் நீட் தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் நீட் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊசூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி ஒன்றியத்தில் பென்னாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூா் ஒன்றியத்தில் விரிஞ்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி ஒன்றியத்தில் காங்கேயநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி. குப்பம் ஒன்றியத்தில் லத்தேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் ஒன்றியத்தில் மேல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மாச்சம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நீட் தோ்வுக்கான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தவிர, ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் வியாழக்கிழமை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் படிக்கும் மாணவா்கள் இந்த பயிற்சி மையங்களில் நேரடியாக வந்து சோ்ந்து கொள்ளலாம். விருப்பப்பட்டால் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளும் பயிற்சி மையத்தில் சோ்ந்து படிக்கலாம்.

இந்த பயிற்சி மையங்களில் அனைத்து பாடங்களுக்கும் தகுந்த ஆசிரியா்கள் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com