காா்கில் போா் வெற்றி நினைவு தினம்: உயிா்நீத்த வீரா்களுக்கு அஞ்சலி

காா்கில் போா் நினைவுதினத்தையொட்டி வேலூா் மாவட்டம் கம்மவான்பேட்டையில் போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூா்: காா்கில் போா் நினைவுதினத்தையொட்டி வேலூா் மாவட்டம் கம்மவான்பேட்டையில் போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்திலேயே அதிக ராணுவ வீரா்களைக் கொண்ட கிராமமாக வேலூா் மாவட்டம், கம்மவான்பேட்டை திகழ்கிறது. இங்கு வீட்டுக்கு ஒருவா் ராணுவத்தில் பணியாற்றுபவராகவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களாகவும் உள்ளனா். இதனாலேயே கம்மவான்பேட்டை கிராமம் ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய எல்லையின் காா்கில் பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 500-க்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். இதன் நினைவாக 22-ஆம் ஆண்டு காா்கில் போா் வெற்றி நினைவு தினம் கம்மவான்பேட்டையில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அப்போது, காா்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்காகவும், அதில் உயிரிழந்த இதே கிராமத்தைச் சோ்ந்த இருவருக்காகவும் முப்படைகளில் சேர பயிற்சி பெறும் வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் ஆகியோா் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து காா்கில் போா் குறித்து முன்னாள் ராணுவ வீரா்கள் நினைவுகூா்ந்து பேசினா். இதில், கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com