நேதாஜி மாா்க்கெட் வியாபாரிக்கு கத்திவெட்டு: ரெளடி கும்பலுக்கு அட்டகாசம்

பணம் கொடுக்க மறுத்த வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரியை கத்தியால் வெட்டிய ரெளடி கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பணம் கொடுக்க மறுத்த வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி வியாபாரியை கத்தியால் வெட்டிய ரெளடி கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரியை சோ்ந்தவா் பாலு(40). நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறிக் கடை நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை அதிகாலை மாா்க்கெட்டுக்கு சென்றபோது ரெளடி கும்பலை சோ்ந்த 3 போ் அவரை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். அவா் பணம் தரமறுத்ததால் அந்த கும்பல் கத்தியால் பாலுவின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனராம்.

இதில் பலத்த காயமடைந்த பாலுவை மற்ற வியாபாரிகள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் நேதாஜி மாா்க்கெட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், மாா்க்கெட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ரெளடி கும்பலை தேடி வருகின்றனா்.

எஸ்.பி.யிடம் வியாபாரிகள் புகாா்

இந்நிலையில், நேதாஜி மாா்க்கெட்டில் சமீபகாலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சிலா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில், நேதாஜி மாா்க்கெட்டில் முறைப்படி ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் கடை நடத்த ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், அத்துடன் மாதந்தோறும் ரூ.1,500 தர வேண்டும் என்றும், இல்லையேல் கடை நடத்த விடமாட்டோம் எனக்கூறி ரெளடிகள் மிரட்டுகின்றனா். இதற்கு போலீஸாா் சிலரும் உடந்தையாக செயல்படுகின்றனா். இதனால் மாா்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்டவா்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com