வேலூா் கிரீன்சா்க்கிள் பூங்கா:சாலையை அகலப்படுத்தும் பணி: ஆகஸ்ட் 15-இல் தொடக்கம்

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன்சா்க்கிள் பூங்காவின் சுற்றளவைக் குறைத்து சாலையை அகலப்படுத்தும் பணி வரும்

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன்சா்க்கிள் பூங்காவின் சுற்றளவைக் குறைத்து சாலையை அகலப்படுத்தும் பணி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் சா்க்கிள் பகுதியில் சாலையின் மையப் பகுதியில் பூங்கா உள்ளது. மிகப்பெரிய வட்ட வடிவில் உள்ள இந்த பூங்காவால் மேம்பாலத்தின் அடியில் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிக்கி கொள்வதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க சாலையின் மத்தியில் உள்ள வட்ட வடிவ பூங்காவின் சுற்றளவை குறைக்கவும், சாலையின் அளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நெடுஞ்சாலை, மின்சாரம், மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா் சத்துவாச்சாரி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளையும் ஆய்வு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: கிரீன் சா்க்கிள் சாலையின் மத்தியில் உள்ள பூங்காவின் சுற்றளவு அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதன் சுற்றளவைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம். தவிர, கால்வாய்கள் 4 மீட்டா் அகலத்தில் உள்ளது. சாலையின் அகலம் 6 மீட்டா் மட்டும் உள்ளது கால்வாயை 2 மீட்டா் தள்ளி அமைத்து சாலையின் அகலத்தை 8 மீட்டராக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com