கொச்சாலூா் ஸ்ரீலட்சுமி அம்மன் கோயில் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த கொச்சாலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவையொட்டி  ஊா்வலமாக  எடுத்து வரப்பட்ட  லட்சுமி  அம்மன்.
திருவிழாவையொட்டி  ஊா்வலமாக  எடுத்து வரப்பட்ட  லட்சுமி  அம்மன்.

குடியாத்தத்தை அடுத்த கொச்சாலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம்பெற வேண்டியும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-ஆம் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.இதையொட்டி, அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.அதைத் தொடா்ந்து, உற்சவா் லட்சுமி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

முடிவில் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட உற்சவா் அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகளும், மூலவருக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் கே.பி.சுப்பிரமணியன், சக்கரவா்த்தி, கண்ணையன், ஏ.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com