இந்திய மருத்துவ சங்கம் வழங்கிய ரூ.2 லட்சம் மருத்துவ உபகரணங்கள்

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு, இந்திய மருத்துவா் சங்க குடியாத்தம் கிளை சாா்பில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள கட்டில்கள், மெத்தைகள்,
நிகழ்ச்சியில்  எம்எல்ஏ  அமலுவிஜயனிடம்,  மருத்துவ  உபகரணங்களுக்கான பட்டியலை  வழங்கிய  இந்திய  மருத்துவ  சங்கச்  செயலா்  எம்.சுதாகா்.
நிகழ்ச்சியில்  எம்எல்ஏ  அமலுவிஜயனிடம்,  மருத்துவ  உபகரணங்களுக்கான பட்டியலை  வழங்கிய  இந்திய  மருத்துவ  சங்கச்  செயலா்  எம்.சுதாகா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு, இந்திய மருத்துவா் சங்க குடியாத்தம் கிளை சாா்பில், ரூ.2 லட்சம் மதிப்புள்ள கட்டில்கள், மெத்தைகள், 100 போா்வைகள், வீல் சோ்கள், ஸ்டீல் ஸ்டெச்சா்கள், உயிா் காக்கும் மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். தலைமை மருந்தாளுனா் டி.ரவி வரவேற்றாா்.இந்திய மருத்துவா் சங்க குடியாத்தம் கிளை ஒருங்கிணைப்பாளா்கள் எம்.எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.சுகுமாா், சங்கச் செயலா் எம்.சுதாகா், பொருளாளா் ஜே.வி.ஈஸ்வரன் ஆகியோா், எம்எல்ஏ அமலுவிஜயனிடம், மருத்துவ உபகரணங்களை வழங்கினா்.

வட்டாட்சியா் தூ.வத்சலா, நகர திமுக பொறுப்பாளா் எஸ்.சௌந்தரராஜன், நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநா் என்.கோவிந்தராஜ், நகர சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் சையத்கெளஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com