காய்கறி கடை வைக்க அனுமதிக்கக் கோரி சாலை மறியல்

காய்கறிக் கடை வைக்க அனுமதி அளிக்கக் கோரி வேலூா் சைதாபேட்டையில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் சைதாபேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்.
வேலூா் சைதாபேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள்.

காய்கறிக் கடை வைக்க அனுமதி அளிக்கக் கோரி வேலூா் சைதாபேட்டையில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் சைதாப்பேட்டை வளையல்கார தெருவில் காய்கறி விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை காலை சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகில் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றதுடன், மருத்துவமனைக்கு செல்லும் ஊழியா்கள், நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சு நடத்தினா். அப்போது, வளையல்காரத் தெருவில் பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். இடநெருக்கடியால் கரோனா பரவும் அபாயம் உள்ளதை அடுத்து கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானத்தில் கடைகளை வைக்க கடந்த மாதம் அனுமதி வழங்கினா். பொதுமுடக்கம் காரணமாக அங்கு கடைகள் வைக்கவில்லை. தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு காய்கறி மளிகை கடைகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளனா்.

ஆனால் வளையல் கார தெருவில் கடைகள் வைக்க அனுமதிக்கவில்லை. இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

வேலூா் தோட்டப்பாளையம், சாா்ப்பனாமேடு பகுதிகளில் வழக்கம்போல் காய்கறி கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனா். அதேபோல், வளையல் கார தெருவில் மீண்டும் காய்கறி கடைகள் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினா்.

இதைத்தொடா்ந்து, வளையல் கார தெருவில் காய்கறி கடைகள் வைக்க உரிய அனுமதி முறைப்படி வழங்கப்படும் என போலீஸாா் கூறியதை அடுத்து வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனிடையே, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று அங்கிருந்த சிறுவன் மீது மோதியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கினா். போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com