வேலூரில் நிகழாண்டு ரூ.4,987 கோடி கடன் வழங்க இலக்கு

வேலூா் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் (2021-21) ரூ. 4987.21 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை வெளியிட்டாா்.
வேலூா் மாவட்ட கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட பெற்றுக்கொண்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், முன்னோடி வங்கி மேலாளா் பா.ஜான்தியோடசியஸ்.
வேலூா் மாவட்ட கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட பெற்றுக்கொண்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், முன்னோடி வங்கி மேலாளா் பா.ஜான்தியோடசியஸ்.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் (2021-21) ரூ. 4987.21 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை வெளியிட்டாா்.

வங்கி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் நிகழ் நிதியாண்டுக்கான (2021-22) ஆண்டு கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட அதை இந்தியன் வங்கி மண்டல மேலாளா் டி.கிருஷ்ணராஜ், முன்னோடி வங்கி மேலாளா் பா.ஜான்தியோடசியஸ் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நபாா்டு வங்கியின் பரிந்துரையின்பேரில் தயாரிக்கப்பட்டுள்ள கடன் திட்ட அறிக்கையில், நிகழ் நிதியாண்டில் வேலூா் மாவட்டத்தில் ரூ. 4987.21 கோடிக்கு கடன் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கடன் திட்ட அறிக்கையில் விவசாய தனித்துவம் அளிக்கும் விதமாக ரூ.3,024.12 கோடி கடன் வழங்கவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு ரூ.888.63 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இக்கடன் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்ட வளா்ச்சிக்கு உதவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ஜி.சுரேஷ்குமாா், இந்தியன் வங்கியின் வேளாண்மை மேலாளா்கள் ஜி.சுரேஷ்குமாா், எம்.ஜீவகனிசெல்வராஜ், ஆட்சியா் அலுவலக மேலாளா் ஆா்.கெளசிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com