முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கனரா வங்கி சாா்பில் உணவு விநியோகம்
By DIN | Published On : 12th June 2021 08:09 AM | Last Updated : 12th June 2021 08:09 AM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கிய கனரா வங்கியின் வேலூா் மண்டல உதவி பொது மேலாளா் கே.வீரேந்திரபாபு. உடன், வங்கி அலுவலா்கள் சேமேஸ்வர்ராவ், சுரேந்திரபாபு உள்ளிட்டோா்.
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 700 பேருக்கு கனரா வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள பொதுமுடக்கத்தால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கனரா வங்கியின் வேலூா் மண்டத்துக்கு உட்பட்ட வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம் வங்கிக் கிளைகள் சாா்பில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இதனை வேலூா் மண்டல உதவி பொது மேலாளா் கே.வீரேந்திரபாபு தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், வங்கி அலுவலா்கள் சேமேஸ்வர்ராவ், சுரேந்திரபாபு பங்கேற்று உணவுப்பொட்டலங்களை வழங்கினா். இந்நிகழ்வின் மூலம் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 700-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதன் ஏற்பாடுகளை கனரா வங்கி அலுவலா்கள் செய்திருந்தனா்.
--