250 இடங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்தும், ஒருங்கிணைந்த வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 250 இடங்களில் பெட்ரோல் பங்க் முன் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
250 இடங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்தும், ஒருங்கிணைந்த வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 250 இடங்களில் பெட்ரோல் பங்க் முன் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி ஓடைப்பிள்ளையாா் கோயில் அருகில் கட்சியின் மாவட்டத் தலைவா் டீக்காராமன், சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் இளங்கோ, விருதம்பட்டில் ஜான், வேலூரில் வாஹித்பாஷா ரகு, சந்திரபிரசாத் ஆகியோா் தலைமையிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. .

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை கிழக்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சி சாா்பில், வி.சி.மோட்டூா் அண்ணா சிலை எதிரே கே.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக பெட்ரோல் விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ஆம்பூா் அருகே சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுரேந்தா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளா் கொத்தூா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com