ரூ. 2.50 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 12th June 2021 08:09 AM | Last Updated : 12th June 2021 08:09 AM | அ+அ அ- |

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில், ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
போ்ணாம்பட்டு- கொத்தபள்ளி ஊராட்சி, இடையே ரூ.38.45 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கொத்தபள்ளி ஊராட்சியில், கொட்டாற்றின் குறுக்கே நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.1.35 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறு பாலத்தையும் அவா் ஆய்வு செய்தாா். பாலத்தின் நீளம், அகலம், தடுப்புச் சுவா்களின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இணைப்புச் சாலைகளும் ஆய்வு செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டன.
தொடா்ந்து, பாலூா் ஊராட்சியில் ரூ.34.34 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
சாத்கா் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள 75 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்கும் பணியையும் ஆட்சியா் தொடக்கி வைத்தாா். ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சி.மாலதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, உதவி செயற்பொறியாளா் மஞ்சுநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபி, ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.